நாள் முழுக்க Hydrated-ஆ இருக்க சூப்பர் டிப்ஸ்.!

By Ishvarya Gurumurthy G
23 May 2024, 11:50 IST

கோடையில் அதீத வெப்பத்தால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க சில ஆரோக்கியமான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை படித்து பயன் பெறவும்.

கோடைகாலத்தில் நீரேற்றமாக இருக்க அதிக திரவங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அல்லது பழ சாறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் என்ன குடிக்க வேண்டும் என்று இங்கே காண்போம்.

மோர்

இது ஒரு நீரேற்றம் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை நிரப்ப உதவுகிறது. எனவே கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க, ஒரு டீஸ்பூன் காய்ந்த இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மோர் குடித்து வருவது, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். கூடுதல் நன்மைகளைப் பெற நாள்தோறும் 3 முதல் 4 கப் அளவு மோர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரஞ்சு சாறு

நீரிழப்பைக் கட்டுப்படுத்த பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு 1-2 கிளாஸ் அளவு சர்க்கரை இல்லாத ஆரஞ்சு சாற்றைக் குடிப்பதன் மூலம் வீட்டிலேயே நீரிழப்பைக் கட்டுப்படுத்தலாம். இதில் ஆரோக்கியமான அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளும், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதன் படி நீரேற்றத்திற்கு ஆரஞ்சு சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

எலுமிச்சை நீர்

இது ஒரு முக்கிய கோடைக்கால பானமாகும். இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் மற்றும் கடுமையான வெப்பத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறத். இது உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அளவை மீட்டெடுக்கிறது.வீட்டிலேயே நீரிழப்பைத் தவிர்க்க எலுமிச்சைத் தண்ணீரை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்கலாம்.

ஆப்பிள் சாறு

கோடைக்காலத்தில் நீரிழப்பைத் தவிர்க்க உதவும் பானங்களில் ஆப்பிள் சாறும் அடங்கும். இதில் நல்ல அளவிலான மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆப்பிள் சாற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இழந்த தாதுக்களை மீட்டெடுக்க உதவுகிறது. இதற்கு நாள்தோறும் 1 முதல் 2 முறை குடிக்கலாம்.

பார்லி நீர்

இது நீரிழிவை எதிர்த்துப் போராடுவதுடன், உடல் இழக்கப்பட்ட திரவங்களை மாற்றி நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இது முக்கிய தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க இந்த நீர் பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 முறை பார்லி நீரைக் குடிக்கலாம்.

தேங்காய் தண்ணீர்

வீட்டிலேயே எளிதாக கிடைக்கக் கூடிய நீரிழப்புக்கு சிறந்த தீர்வாக அமைவது தேங்காய் தண்ணீர் ஆகும். இதில் அதிகளவு எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. சாதாரண நீரை விட தேங்காய் நீர் உடலை மிக விரைவாக நீரேற்றமடையச் செய்ய அனுமதிக்கிறது.