ஆண்ட்ரோஜன் ஹார்மோனை கட்டுப்படுத்த இது ரொம்ப முக்கியம்!

By Karthick M
06 May 2025, 23:17 IST

ஆண்ட்ரோஜன் ஹார்மோன் தசைகள், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பாலியல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. இது ஆண், பெண் இருவரிடமும் உள்ளது.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதாவது ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

துத்தநாகம் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த மிக முக்கியம். பூசணி விதைகள், ஓட்ஸ், உளுந்து, எள், வேர்க்கடலை சாப்பிடலாம்.

மக்னீசியம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம். வாழைப்பழம், கீரை, அவகேடோ, கோகோ, வேர்க்கடலை, பாதாம் சாப்பிடலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதும் அவசியம். ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள், சியா விதைகளை சாப்பிடலாம்.