ஃப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன? ஏன் வருகிறது?

By Karthick M
20 Aug 2024, 08:39 IST

ஃப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏன் வருகிறது. ஃப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?

அரிசியை சமைத்த பிறகு, மீதமுள்ள அரிசியை அறை வெப்பநிலையில் சில மணிநேரங்கள் அல்லது ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டால், அதில் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கும் நிலையை தான் ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்கிறோம்.

ஃப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் பாதிப்பு

ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்பது பழமையான உணவின் காரணமாக ஒருவரின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்பு ஆகும்.

ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம்க்கான அறிகுறிகள்

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல், காய்ச்சல், கண் வலி.

பழைய உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பழைய பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழைய உணவை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிட்டாலும் அதில் பாக்டீரியா உருவாகி அது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஃபிரைடு ரைஸ் சிண்ட்ரோம்க்கான சிகிச்சை

பழைய உணவுகளை சாப்பிட்டு உடல்நிலை மோசமடைந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள். மருத்துவர்கள் உங்களுக்கு சரியான சிகிச்சையை வழங்குவார்கள்.