இரவில் தூக்கம் வராமல் இருக்க இந்த ஹார்மோன் பற்றாக்குறை தான் காரணம்!

By Devaki Jeganathan
19 Feb 2024, 20:18 IST

உடலை ஆரோக்கியமாக வைக்க தூக்கம் மிகவும் முக்கியம். ஆனால், உடலில் குறிப்பிட்ட ஹார்மோன் இல்லாததால் நல்ல தூக்கம் வராது. இதனால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். எந்த ஹார்மோன் குறைபாடு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்

உங்களுக்கு ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் குறைவாக இருக்கலாம். இதை இயல்பாக தூக்க ஹார்மோன் என்றும் அழைப்பார்கள். இந்த ஹார்மோன் தூக்க சுழற்சி மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துகிறது.

வால்நட்

நல்ல தூக்கத்திற்கு வால்நட் உட்கொள்ளலாம். இது மெலடோனின் ஹார்மோனை ஊக்குவிக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உட்பட பல பண்புகளைக் கொண்டுள்ளது.

கெமோமில் டீ

இந்த டீ குடிப்பதால் மெலடோனின் அதிகரிக்கிறது. கெமோமில் டீயில் பொட்டாசியம், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய பண்புகள் உள்ளன.

பாதம்

பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குவது மட்டுமல்லாமல் தூக்கத்தையும் மேம்படுத்துகிறது. இதில், நார்ச்சத்து, புரதம், மாங்கனீஸ், வைட்டமின் ஈ, மெக்னீசியம் உள்ளது, இது மெலடோனின் அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு சாப்பிடுவதால் நல்ல தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் அதிகரிக்கிறது. கூடுதலாக, இது வைட்டமின் பி பண்புகளையும் கொண்டுள்ளது.

தியானம் செய்யுங்கள்

தினமும் தூங்கும் முன் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள். இது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் நல்ல தூக்கமும் கிடைக்கும்.