நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடி வேலை (WFH) செய்கிறோம். எனவே, நின்றுகொண்டு, படுத்து கொண்டு என நமக்கு சௌகரியமான நிலையில் அமர்ந்து வேலை செய்வோம். தொடர்ந்து பல மணி நேரம் தவறான நிலையில் அமர்ந்திருப்பதால், பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால்
தொடர்ந்து உட்கார்ந்திருப்பதால், நீங்கள் நீரிழிவு நோயாளியாக மாறலாம். தொடர்ந்து 6 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்
தவறான நிலையில் அமர்வதால் இதயத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை செய்வது தமனிகளின் விரிவாக்கத்தை 50 சதவிகிதம் குறைக்கிறது. இதனால் மூளையின் பல பகுதிகளுக்கு ரத்தம் செல்வதில்லை.
கால்களில் இரத்த உறைவு
தவறான நிலையில் அமர்வதால் கால்களில் ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்படும். இந்த நோயில், உங்கள் கால்கள் மற்றும் தசைகள் வீக்கம் தொடங்கும். மேலும், நடப்பதிலும் சிரமம் ஏற்படும்.
எலும்பு முறிவு
தொடர்ந்து தவறான நிலையில் அமர்வதால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. இந்நிலையில், சிறிய காயம் ஏற்பட்டால் கூட எலும்பு முறிவு சாத்தியம் அதிகரிக்கிறது.
குறைவான இரத்த ஓட்டம்
பல மணி நேரம் தவறான நிலையில் அமர்வதால், உடலில் ரத்தம் சரியாக ஓடாமல், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
உடல் பருமன் அதிகரிப்பு
தொடர்ந்து பல மணிநேரம் ஒரே இடத்தில் அல்லது தவறான நிலையில் அமர்ந்து இருப்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக நீங்கள் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
சரியான இருக்கை நிலை
2 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்காராதீர்கள். இது தவிர, ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இடைவெளி எடுக்கும்போது கால்களை நீட்டவும் அல்லது சிறிது நடக்கவும்.