நாக்கை சுத்தம் செய்வது
நாக்கில் பெரும்பாலான பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. எனினும், பலர் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் என்று கருதுவதில்லை. இதன் காரணமாக வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகள் எழலாம். இதில் நாக்கை சுத்தம் செய்யாததால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் காணலாம்
நோய்த்தொற்று
பல் துலக்கிய பின், நாக்கை சுத்தம் செய்யாமல் இருப்பதால் வாயில் பாக்டீரியாக்கள் வளர காரணமாகிறது. இது வாயின் உட்புற பகுதிகளில் தொற்றுநோயை ஏற்படுத்தலாம்
குறைந்த சுவை உணர்வு
சில நேரங்களில் அழுக்குகள் நாக்கில் ஒரு அடுக்கை உருவாக்கி, சுவை உணர்வைக் குறைக்கிறது. இதன் காரணமாக, நாக்கால் சுவையை சரியாக உணர முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்
கொப்புளங்கள்
பல நேரங்களில் நாக்கை சுத்தம் செய்யாததன் காரணமாக, நாக்கில் கொப்புளங்கள் தோன்றலாம். எனவே, தொடர்ந்து பல் துலக்குவதுடன் நாக்கை சுத்தம் செய்வதை வழக்கமாக்க வேண்டும்.
செரிமான பிரச்சனைகள்
நாக்கில் அழுக்கு படிவதால், அது உமிழ்நீரின் தரத்தை மோசமாக்கலாம். எனவே, உமிழ்நீர் சரியாக செயல்படாதபோது, உணவு சரியாக செரிமானம் ஆகாது
கருப்பு அடுக்கு உருவாவது
நாக்கில் ஒரு வெள்ளை அல்லது சில நேரங்களில் கருப்பு அடுக்கு உருவாக அதிகம் வாய்ப்புள்ளது. இது மோசமாகத் தெரிவதுடன், தொற்றுநோயை ஏற்படுத்தலாம்
நோயெதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பு
வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து படிப்படியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது
வாய் துர்நாற்றம்
நாக்கில் சேரும் அழுக்குகளை தினமும் சுத்தம் செய்யாவிட்டால், அது அழுக ஆரம்பித்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது
குறிப்பு
இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கூறப்பட்டதை அடிப்படையாகக் கொண்டதாகும். நாக்கின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்