வெயிலில் ஐஸ் பொருட்கள் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?

By Karthick M
20 Jun 2024, 17:48 IST

கோடையில் ஐஸ் அதிகமாக சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதா இல்லையா என்ற கேள்வி பலருக்கும் வரும். இதற்கான பதிலை விரிவாக பார்க்கலாம்.

ஐஸ் சாப்பிட ஆசை ஏன்?

ஐஸ் சாப்பிடுவதற்கு அதிக ஆசை ஏற்படுவது இரும்புச்சத்து குறைப்பாட்டின் அறிகுறியாகும். இதை அலட்சியம் செய்யக் கூடாது.

ஐஸ் சாப்பிடுவது சரியா தவறா?

கோடை காலத்தில் ஐஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

பற்கள் சேதமடையும்

ஐஸ் அதிகமாக சாப்பிடுவது வாய் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் பல் பிர்சசனைகள் ஏற்படுகிறது. ஐஸ் சாப்பிட்டால் பற்கறின் வெளிப்புற அடுக்கு எனாமல் சேதமடையலாம்.

பசி ஏற்படாது

ஐஸ் சாப்பிடுவது அல்லது ஐஸ் கலந்த தண்ணீர் குடிப்பது வயிற்றில் செரிமான செயல்முறையை பாதிக்கிறது. இதனால் பசியின்மை குறைவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

ஐஸ் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக ஒரு நபர் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரும்.

மலம் கழிப்பதில் சிரமம்

அதிகமாக ஐஸ் சாப்பிடுவது அல்லது ஐஸ் கலந்த நீர் குடிப்பது மலத்தை கடினமாக்குகிறது. இது வயிற்று பிரச்சனைகள், குடல் புண்களை ஏற்படுத்தும்.