ஒருவர் எப்போதாவது சிறுநீர் கழிப்பதை அடக்குவது பொதுவாக பாதிப்பில்லாதது. ஆனால், இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இதில் சிறுநீர் கழிப்பதை அடக்குவதால் ஏற்படும் சில பாதிப்புகளைக் காணலாம்
சிறுநீர்ப்பை நீட்டுதல்
தொடர்ந்து சிறுநீர் கழிப்பதை அடக்குவது சிறுநீர்ப்பையை நீட்டி, அதை சரியாக காலியாக்குவதை கடினமாக்குகிறது. அதிலும் கடுமையான சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவி தேவைப்படலாம்
வலி
சிறுநீர் கழிக்கும் தூண்டுதலைப் புறக்கணிப்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் இது இடுப்புப் பிடிப்புகளை ஏற்படுத்துகிறது
சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகக் கற்கள் இருந்தால், சிறுநீர் கழிப்பதை அடக்கி வைப்பது நிலையை மேலும் மோசமாக்கலாம். ஏனெனில், இதில் சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய தாதுக்கள் உள்ளது
சிறுநீர் பாதை தொற்றுகள்
சிறுநீரை வெகுநேரம் அடக்கி வைத்திருப்பது பாக்டீரியாக்களை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது UTI அல்லது சிறுநீர் பாதை தொற்றுகளை அதிகரிக்கிறது
இடுப்புத்தசை பலவீனம்
அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்துவது இடுப்புத் தள தசைகளை பலவீனப்படுத்தலாம். இது சிறுநீர் அடங்காமையை ஏற்படுத்துகிறது
குறிப்பு
தொடர்ந்து சிறுநீர் அடக்குவதைத் தவிர்க்க வேண்டும். இது நாளடைவில் அசௌகரியம், தொற்றுகள், தசை சேதம், சிறுநீர்ப்பை நீட்சி போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது