ஆப்பிள் ஜூஸ் அதிகமாக குடித்தல் என்ன நடக்கும்?

By Karthick M
29 Mar 2024, 23:42 IST

அதிக ஆப்பிள் ஜூஸ் குடிப்பது நல்லதா?

ஆப்பிள் பழம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பது போல் அதன் ஜூஸ்-ம் பல நன்மைகளை வழங்கும். ஆனால் அதை அதிகம் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை பார்க்கலாம்.

எடை அதிகரிக்கும்

உடல் எடையை குறைக்க அடிக்கடி ஆப்பிள் ஜூஸ் குடிப்பது நல்லது. ஆனால் உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது அதிகம் ஆப்பிள் ஜூஸ் குடிக்கக் கூடாது. இதில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி எடை அதிகரிக்கச் செய்யும்.

பற்கள் சேதம்

அதிக அளவு ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் பற்களின் பற்சிப்பியை மோசமாக பாதிக்கும். இது பற்களை வலுவிழக்கச் செய்யும்.

சர்க்கரை அளவு அதிகரிக்கும்

அதிக அளவு ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனையை அதிகரிக்கும். ஆப்பிள் ஜூஸ் அதிகம் குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

வயிற்று வலி

ஆப்பிள் ஜூஸ் சமயத்தில் வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை உட்கொள்வது வாயு பிரச்சனையும் ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு

ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அதை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவரின் உடல் வாகை பொறுத்து இந்த பிரச்சனைகள் வேறுபடும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.