இரவு படுக்கைக்கு செல்லும் முன் தண்ணீர் அருந்துவது பல நன்மைகளைத் தருகிறது. இதில் தூங்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
போதுமான நீரேற்றம்
பகல் நேரத்தில் நாம் தண்ணீரை இழக்கிறோம். உடலில் போதுமான நீரேற்றம் இல்லாமல் தூங்கும் போது அது இரவு தூக்கத்தைக் கெடுக்கும், எனவே நல்ல தூக்கத்தைப் பெற இரவு தூங்கும் முன் 1 கிளாஸ் தண்ணீர் அருந்தலாம்
குறைந்த வெப்பநிலை
தூங்கும் போது உடலின் வெப்பநிலை இயல்பாகவே குறைகிறது. அதேசமயம் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது
தொண்டை வறட்சி
நீரிழப்பு காரணமாக தொண்டை வறட்சி மற்றும் நாசி பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் குறட்டை, தூக்கத்தில் லேசான மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது
தசை வலுவடைதல்
பகலில் உடற்பயிற்சி செய்வது மற்றும் பல்வேறு வகையான வேலைகள் காரணமாக தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படலாம். இரவில் படுக்கும் முன்பாக, தண்ணீர் குடிப்பது தசைகளுக்கு நன்மை பயக்கும்
தூக்கத்தில் மாற்றம்
படுக்கைக்கு முன்பாக போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உறக்க நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கலாம்
எவ்வளவு நீர்
இரவு தண்ணீர் அருந்துவது சிறுநீர் பையை நிரப்பி விடலாம். எனவே தூக்கம் பாதிக்காமல் இருக்க படுக்கும் முன் சிறுநீர் கழித்து விட்டு, 1 கிளாஸ் தண்ணீரை அருந்தலாம். இவ்வாறு செய்வது தூங்கும் நேரத்தில் சிறுநீர் உற்பத்தி குறையும்