பைல்ஸ் நோயாளிகள் இந்த உணவுகளைத் தப்பித் தவறிக்கூட சாப்பிடக்கூடாது!
By Kanimozhi Pannerselvam
10 Mar 2024, 09:30 IST
காரமான உணவுகள்
பொதுவாக காரமான உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை உட்கொள்வதால் குடல் இயக்கம் பாதிக்கப்படும். எனவே, காரமான உணவுகளை தவிர்க்கவும். இல்லையெனில் வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும்.
அதிக உப்பு
உப்பு அதிகம் உள்ள உணவுகளும் பைல்ஸ் பிரச்சனையை அதிகரிக்கின்றன. ஏனெனில் இவற்றை உண்ணும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இது குடல் இயக்கத்தின் போது மூல நோய் உருவாக காரணமாகிறது.
பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவற்றை உட்கொள்வதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இது பிரச்சனையை மோசமாக்குகிறது.
மைதா
மைதா மாவில் செய்யக்கூடிய பாஸ்தா, பீட்சா, ஒயிட் பிரட், நூடுல்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து இல்லாமல் பசையம் நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமே கொண்ட இந்த உணவுகள் முழுமையாக ஜீரணிக்கப்படுவதில்லை. குடலில் ஒட்டிக்கொண்டு மலச்சிக்கலை உண்டாக்கும்.
ஆல்கஹால்
பைல்ஸ் உள்ளவர்கள் மது அருந்தக்கூடாது. மது அருந்துவது மலத்தை கடினமாக்கும், இதனால் குடல் இயக்கங்களின் போது கடுமையான வலி ஏற்படக்கூடும்.
இறைச்சி
பைல்ஸ் உள்ளவர்கள் பொதுவாக இறைச்சியை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ரெட் மீட், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பதால் அவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.