சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க இதை சாப்பிடவும்.!

By Ishvarya Gurumurthy G
19 Aug 2024, 14:00 IST

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் உணவும் உங்களுக்கு கை கொடுக்கலாம். இதற்காக நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இங்கே.

வெங்காயம்

சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சோடியம் குறைவாக உள்ள வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பூண்டு

சிறுநீரக நோயாளிகள் பூண்டைப் பயன்படுத்த வேண்டும். பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

காலிஃப்ளவர்

சிறுநீரக நோயாளிகளுக்கு சூப்பர் உணவாக காலிஃபிளவர் செயல்படுகிறது. கொழுப்பு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை குறைப்பதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரிகள்

ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான அமைப்பை மேம்படுத்தும். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதோடு ஸ்ட்ராபெர்ரியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

ஓட்ஸ்

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் 'பீட்டா குளுக்கன்' என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது.

ரெட் கேப்சிகம்

சிறுநீரக நோயாளிகளுக்கு ரெட் கேப்சிகம் ஒரு சூப்பர் உணவாக செயல்படுகிறது. சிவப்பு கேப்சிகத்தில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிளை தினசரி சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் வராது என நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கலாம்.