உஷார்! அதிக யூரிக் அமிலத்தால் இந்த நோய்கள் வரலாம்

By Gowthami Subramani
08 Oct 2024, 16:22 IST

அதிக யூரிக் அமிலம் ஹைப்பர்யூரிசிமியா என்றும் அழைக்கப்படுகிறது. உடலில் அதிகளவு யூரிக் அமிலம் காரணமாக பல்வேறு உடல்நல உபாதைகள் ஏற்படலாம். இதில் அதிக யூரிக் அமிலத்தால் ஏற்படும் நோய்கள் குறித்து காணலாம்

உடல் பருமன்

அதிக யூரிக் அமிலம் அதிக உடல் எடைக்குக் காரணமாகிறது. ஏனெனில் கொழுப்பு செல்கள் அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. அதே சமயம், உடல் பருமன் அதிகப்படியான யூரிக் அமிலத்தை வடிகட்டுவது கடினமாகிறது

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகளுக்கு யூரிக் அமில அளவு அதிகமாகலாம். ஏனெனில், உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்கள் அதிக யூரிக் அமிலத்தை தக்கவைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு கீல்வாதம் அல்லது சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது

கீல்வாதம்

அதிக யூரிக் அமிலத்திற்கு மிகவும் பொதுவான காரணமாக கீல்வாதம், மூட்டு வலி போன்றவை ஏற்படுகிறது. இதில் யூரிக் அமில படிகங்கள் மூட்டுகளில் குவிந்து திடீரென கடுமையான வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது

சொரியாசிஸ்

சொரியாசிஸ் என்பது பியூரின்களின் முறிவை அதிகரிப்பதாகும். பியூரின்கள் வளர்சிதைமாற்றம் செய்யப்படுவதால், இது அதிக யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது

ஹைப்போ தைராய்டிசம்

குறைந்த தைராய்டு ஹார்மோன் அளவு, வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கலாம். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. இது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை அகற்றுவதை கடினமாக்குகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் அதிக செறிவு ஏற்படலாம்

சிறுநீரக நோய்

சிறுநீரகங்கள் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வடிகட்டுகிறது. இந்நிலையில் சிறுநீரகங்கள் சேதமடையும் போது அது யூரிக் அமிலத்தைத் திறம்பட அகற்ற முடியாது. இதனால், யூரிக் அமிலம் அதிகமாகி கற்கள் அல்லது நாள்பட்ட சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்

லுகேமியா

லுகேமியா போன்ற புற்றுநோயானது விரைவான உயிரணு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது டிஎன்ஏ-வில் முறிவை அதிகரிக்கிறது மற்றும் யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பியூரின்களை வெளியிடுகிறது