நமது நாக்கின் நிறத்தை வைத்து உடம்பில் உள்ள நோயை கண்டறியலாம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். உதட்டின் நிறத்தை வைத்து உங்கள் உடலில் உள்ள நோயை கண்டறியலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நாக்கை போலவே நோய் தோற்று ஏற்பட்டால் உதடுகளின் நிறமும் மாறும். அவற்றை பற்றி பார்க்கலாம்.
கல்லீரல் பிரச்சனை
உங்கள் உதடுகளின் நிறம் சிவப்பு நிறமாக இருந்தால் அதை லேசாக நினைக்காதீர்கள். உங்கள் உதடுகள் திடீர் என சிவப்பாக மாறினால், கல்லீரல் தொடர்பான நோய் பாதிப்பை குறிக்கிறது.
இரத்த சோகை
உதடுகளின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறினால் இரத்த சோகை நோய் பிரச்சினை இருப்பதை குறிக்கிறது. உடலில் இரத்தம் இல்லாததால், உதடுகள் வெண்மையாக மாறும்.
தொற்று
உங்கள் உதடுகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கினால், இதற்கான காரணங்களில் ஒன்று தொற்றுநோயாக இருக்கலாம். இதனால், உதடுகளும் வெண்மையாக மாற ஆரம்பிக்கும்.
இருதய நோய்
சில சமயம் கடும் குளிரின் காரணமாக உதடுகள் ஊதா நிறமாக மாற ஆரம்பிக்கும். ஆனால், இயல்பாக திடீர் என உங்கள் உதடுக்க ஊதா நிறமாக மாறினால் அது இதயம் தொடர்பான நோய்களைக் குறிக்கிறது.
நுரையீரல் பிரச்சனை
அதே போல, உங்கள் உதடுகள் கரும் பச்சை அல்லது ஊதா நிறமாக காணப்பட்டால் உங்களுக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது. எனவே, சற்று கவனமாக இருப்பது நல்லது.
வயிற்று பிரச்சினை
உங்கள் உதடுகளின் நிறம் நீலமாக மாறினால், அது வயிறு தொடர்பான பிரச்சனையைக் குறிக்கிறது. எனவே, அலட்சியம் காட்டாமல் மருத்துவரை சந்திக்கவும்.
சுவாச பிரச்சனைகள்
உங்கள் உதடுகளின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால், அது உணவு ஒவ்வாமைக்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது. இதனுடன், இது சுவாச நோய்களின் அறிகுறியாகும்.