திரை நேரம் அதிகரிப்பது கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் முன்பு அதிக நேரத்தை செலவிடுவதும் கண் வலியை ஏற்படுத்தும்
தூசி, வறட்சி அல்லது ஒவ்வாமை ஆகியவை கண்களில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் கைகளால் கண்களைத் தேய்க்கும் போது, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கண்களுக்குள் நுழைந்து தொற்றுநோயை அதிகரிக்கும். இதனால் கூட கண் வலி அல்லது கண்கள் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.