குதிகால் வெடிப்புக்கு இது தான் காரணம்

By Ishvarya Gurumurthy G
30 May 2024, 14:58 IST

குதிகாலில் வெடிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சில முக்கிய காரணங்களை இங்கே காண்போம். இதனை பின்பற்றி பயன் பெறவும்.

உடல் பருமன்

உடல் எடையை மொத்தமாக பாதம் தான் தாங்குகிறது. இதனால் உடல் பருமனாக இருப்பவர்கள் நிற்கும்போதும், நடக்கும் போதும் குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது.

காலணி தேர்வு

நீங்கள் நீண்ட காலமாக தட்டையான காலணிகளை மட்டும் அணிகிறீர்கள் என்றால், அதை உடனே மாற்றவும். இது குதிக்கால் வெடிப்புக்கு காரணமாக இருக்கும்.

தண்ணீரில் நிற்பது

நீங்கள் நீண்ட நேரம் தண்ணீரில் நின்றாலும், குதிகால் வெடிப்பு ஏற்படும். இதற்கு ஈரப்பதம் ஒரு காரணம்.

வயது

வயது மூப்பு காரணமாக சிலருக்கு குதிகால் வெடிப்பு ஏற்படலாம். இதற்கு காரணம், ஒருவர் வயதாகும் போதும், அவர்கள் பாதங்களில் உள்ள ஈரப்பதம் குறையும். மற்றும் தோல் நெகிழ்வுத்தன்மையை இழக்கிறது.

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் ஈ மற்றும் பி3 குறைபாடு, குதிகால் வெடிப்புக்கு வழிவகுக்கும். மேலும் தைராய்டு, நீரிழிவு போன்ற நோய்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.

நீண்ட நேரம் நிற்பது

ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றாலும், குதிகால் வெடிப்பு ஏற்படும். இதற்கு காரணம் உடலின் பாரத்தை பாதம் தாங்குவது தான்.