கோடையில் சளி மற்றும் இருமல் வர காரணம் என்ன? வைத்தியம் இதோ!

By Karthick M
04 May 2024, 19:13 IST

குளிர்காலத்தில் சளி, இருமல் வருவது இயல்பு என்றாலும். கோடை காலத்தில் இது ஏற்பட காரணம் என்ன என்பதை தெரியாமல் பலரும் குழப்பம் அடைகிறார்கள். இதற்கான காரணம் மற்றும் வைத்திய முறையை பார்க்கலாம்.

கோடை கால சளி மற்றும் இருமல்

குளிர்காலத்தில் வெயிலுக்குள் உடனடியாக செல்வோம், உடனடியாக குளிர்ச்சியை நாடுவோம். இப்படி உடல் உடனுக்குடன் எதிரெதிர் வெப்பநிலையை சந்திப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது.

போதுமான ஒய்வு அவசியம்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த விரும்பினால் நிம்மதியான ஓய்வு மிக முக்கியம். தினசரி 8 மணி நேரம் தூங்கினால் போதும். இது பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

நீர்ச்சத்து மிக முக்கியம்

கோடையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஒரு காரணம். கோடையில் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் நல்ல அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு

கோடை காலத்தில் உணவு முறை என்பது மிக முக்கியம். ஜங்க் ஃபுட் போன்ற உணவுகளை நிறுத்த வேண்டும். மூலிகை பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.