உடல் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையே மூட்டுவலி என அழைக்கிறோம். இது தீராத வலியை ஏற்படுத்தும். மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, இவற்றை எப்படி தவிர்ப்பது என இங்கே பார்க்கலாம்.
பளு தூக்குதல்
எடை அதிகம் கொண்ட பைகள், மூட்டைகள் போன்றவற்றை தூக்குவதாலும் மூட்டு வலி ஏற்படலாம். அதிக எடையை தூக்கும் போது மூட்டுகளின் சதையில் ஏற்படும் அழற்சி, மூட்டு வலியை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
உடல் ஆரோக்கியமாக இருக்க போதிய அளவு உறக்கம் அவசியம். அந்த வகையில், போதி உறக்கத்தை தவிர்க்கும் நபர்கள் மூட்டு வலி பிரச்சனைக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் எடை அதிகரிப்பு
உடலின் எடை அதிகரிக்கும் போது, உடல் தசைகளிலும் அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்தம் சதைபிடிப்பு, சதைகளின் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கடினமான உடற்பயிற்சி
கடினமாக உடற்பயிற்சி செய்யும் போது, நீங்கள் மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தை அனுப்ப நேரிடும். இந்த அழுத்தம், மூட்டு சதைகளின் அழற்சிக்கு வழிவகுப்பதோடு, மூட்டு வலிக்கும் காரணமாகிறது.
பரம்பரை பிரச்சனை
மூட்டு வலி தங்களின் மரபணு வழியாகவும் ஏற்படலாம். மேலும், உங்களின் வாழ்க்கை முறை காரணமாக மூட்டு வலி ஏற்படுவதுடன், பரம்பரை வழியாகவும் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றனர்.
மருந்துகளின் நுகர்வு
உடல் வலி, தலை வலி போன்ற பிரச்சனைகளுக்கு நீங்கள் சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவாகவும் மூட்டு வலி ஏற்படலாம். ளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மூட்டுவலியை ஏற்படுத்தும்.
உடல் இயக்கம் குறைவு
உடலின் அசைவுகள் மற்றும் இயக்கங்கள் குறையும் போது, மூட்டு வலி பிரச்சனை ஏற்படுகிறது. அதேப்போன்று, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசவு இன்றி அமர்ந்திருப்பதும் மூட்டு வலியை ஏற்படுத்தும்.