உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கே. பதிவை படித்து தெரிந்துக்கொள்ளவும்.
உப்பு, சர்க்கரை
உப்பு மற்றும் சர்க்கரை உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். முடிந்த அளவு சர்க்கரை மற்றும் உப்பை குறைத்துக்கொள்வது நல்லது.
பாக்கெட் உணவுகள்
பாக்கெட்டுகளில் உள்ள சிப்ஸ், நூடில்ஸ் மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இதில் உப்பு அதிகமாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
ஹாட் டாக், பீட்சா, பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அதிகம் உப்பு சேர்க்கப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
சாக்லெட்
பல வண்ணங்களில் கிடைக்கும் சாக்லெட்களில் பல வகையான இராசயனங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட சர்க்கரைகள் சேர்க்கப்படும். இவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
குளிர் பானங்கள்
சந்தைகளில் கிடைக்கக்கூடிய குளிர் பானங்களில் செறிவூட்டப்பட்ட சர்க்கரை மற்றும் இராசனங்கள் சேர்க்கப்படும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
மது
மது அருந்துவது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருக்கும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
பேக்கரி உணவுகள்
பேக் செய்யப்பட்ட உணவுகளில் அதிகபடியான சர்க்கரை உள்ளடக்கம் இருக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.