தசைகள் மற்றும் சரும ஆரோக்கியத்தில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சிலர் போதிய புரதச்சத்து இல்லாமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இதில் புரத குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகளைக் காணலாம்
தசை இழப்பு
உணவில் புரதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடல் தசை புரதத்தைப் பயன்படுத்துகிறது. இதனால், தசையிழப்பு மற்றும் பலவீனம் ஏற்படலாம். இதனால் குறிப்பாக வயதானவர்களே பாதிக்கப்படுவர்
சருமம், முடி, நகப் பிரச்சனைகள்
புரதக் குறைபாடு காரணமாக வறண்ட, உரிந்துபோகும் சருமம், முடி மெலிதல் மற்றும் நகங்கள் உடைந்து போகுதல் போன்றவை ஏற்படலாம்
வீக்கம்
புரத அளவு குறைவாக இருக்கும் போது இரத்தத்தில் திரவம் குவிவதற்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக சருமத்தில் வீக்கம் ஏற்படலாம்
பலவீனமான எலும்புகள்
போதுமான புரதத்தை சாப்பிடாமல் இருப்பதால் எலும்புகள் பலவீனமாகி, எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்
கொழுப்பு நிறைந்த கல்லீரல்
புரதம் உட்கொள்வது கல்லீரலிலிருந்து கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. போதுமான புரதம் இல்லாததன் காரணமாக, கல்லீரலில் கொழுப்பு படிந்து கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தலாம்
தொற்று நோய்கள்
உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்க புரதம் உதவுகிறது. ஆனால், குறைந்தளவு புரத உட்கொள்ளல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய்கள் உண்டாகலாம்