சிறுநீரக கற்களின் அறிகுறிகள் என்ன?

By Karthick M
18 Jul 2024, 18:21 IST

தவறான உணவுப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரக கற்கள் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. சிறுநீரக கற்கள் வரும்போது உடலில் பல அறிகுறிகள் தோன்றும். அவை என்னனென்ன என்று பார்க்கலாம்.

சிறுநீரக கற்கள் ஒரு தீவிர நோயாகும். இது நடந்தால் நோயாளி கடுமையான வலியை சந்திக்க நேரும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.

வயிற்று வலி

சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் வயிற்றில் வலி ஏற்படும். இந்த வலி உங்களை மிகவும் தொந்தரவு செய்வதாக அமையலாம்.

வாந்தி

சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை ஏற்படும். சிறுநீரக் குழாயில் கல் இருந்தால் இந்த பிரச்சனை கடுமையாகிவிடும்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரக கற்கள் காரணமாக சிறுநீரில் இரத்தத்தின் பிரச்சனை ஏற்படும். சில நேரங்Kளில் சிறுநீரில் இரத்தத்துடன் கடுமையான வலியை உணரலாம்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். சிறுநீர் குழாயில் கல் அடைப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என ஆசை வரும்.

காய்ச்சல்

சிறுநீரக கற்கள் இருந்தால் நோயாளி காய்ச்சலால் பாதிக்கப்படலாம். சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்பு இருந்தால் இந்த தொற்று காரணமாக காய்ச்சல் வரலாம்.