மோசமான உணவுப் பழக்கம் மற்றும் நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது வயிற்றுப் போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு முன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.
வயிற்று வலி
வயிற்று வலி வயிற்றுப் போக்கின் முக்கிய அறிகுறியாகும். குறிப்பாக வயிற்றின் மேல் பகுதியில் கடுமையான வலியை உண்டாக்கும்.
பசியிழப்பு மற்றும் காய்ச்சல்
வயிற்றுப்போக்கு காரணமாக பசியின்மை பிரச்சனை ஏற்படும். அதேபோல் சில சமயங்களில் காய்ச்சல் பிரச்சனையும் ஏற்படும்.
நீரிழப்பு மற்றும் வாந்தி
நீரிழப்பு பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகம். அதேபோல் வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கத் தொடங்கும்.