டிமென்ஷியா
மூளையைப் பாதித்து நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துவதுடன், சிந்தனை மற்றும் பகுத்தறியும் திறனைக் குறைக்கும் நோய் டிமென்ஷியா ஆகும். இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்
நினைவாற்றல் இழப்பு
டிமென்ஷியாவின் பொதுவான அறிகுறி நினைவாற்றல் இழப்பாகும். இதனால் ஒரு நபர் சமீபத்திய நிகழ்வுகள் அல்லது செயல்களை மறக்கத் தொடங்குவர்
கோபம் அடைவது
டிமென்ஷியாவால் ஒரு நபரின் ஆளுமையில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் எரிச்சல், சோகம் அல்லது கோபத்தை ஏற்படுத்தலாம்
குழப்பமடைவது
மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நேரம், இடம் அல்லது நபர்களை அடையாளம் காண்பதில் சிரமப்படுவர். இதனால் அடிக்கடி குழப்பம் உண்டாகும்
அன்றாட பணிகளில் சிரமம்
டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பின் சமைப்பது, குளிப்பது போன்ற அன்றாட பணிகளில் ஒருவர் சிரமப்படலாம்
தூங்குவதில் சிக்கல்
சில நேரங்களில் ஒரு நபர் தூங்குவதில் சிக்கல் அல்லது இரவில் அடிக்கடி எழுந்திருப்பர். இது டிமென்ஷியா நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது