கால்சியம் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். ஆனால் நம் உடலில் கால்சியம் சத்து குறைந்தால் சில அறிகுறிகள் தோன்றும்.
மனித உடல் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் அவசியம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் கால்சியம் அவசியம். வலிமையான எலும்புகள், இதயம் உள்ளிட்ட தசைச் சுருக்கங்களைக் கட்டுப்படுத்துவது, வலிமையான பற்கள், ஆரோக்கியமான நரம்பு மண்டலம் போன்ற அனைத்திற்கும் கால்சியம் தேவை.
ஹார்மோன் உற்பத்தி, செல் சிக்னலிங் அமைப்பு மற்றும் என்சைம் செயல்பாடு ஆகியவற்றில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் எப்பொழுது உடலில் கால்சியம் குறைகிறதோ அப்போதெல்லாம் அது சில அறிகுறிகளின் மூலம் நமக்கு உணர்த்தலாம். அந்த அறிகுறிகள் இங்கே.
பிடிப்புகள்
தசை செயல்பாட்டிற்கு கால்சியம் முக்கியமானது. கால்சியம் அளவு குறைவாக இருந்தால், தசைகள் சரியாக வேலை செய்யாது. கால்கள் மற்றும் கைகளின் தசைகளில் சோம்பல் மற்றும் உணர்வின்மை ஏற்படும்.
நடுக்கம்
கால்சியம் குறைபாடு நரம்பு மண்டலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் கூச்சம், விரல்கள், கால்கள், உதடுகள் மற்றும் நாக்குகளில் ஊசிகளால் குத்தப்படுவது போல் தோன்றும்.
உடைந்த நகங்கள்
கால்சியம் அளவை நகங்கள் மூலம் அறியலாம். உடலில் போதுமான கால்சியம் இல்லாவிட்டால், நகங்கள் உடையக்கூடியதாகவும், நகங்களின் முனைகள் உடைந்து பிளவுபடுவதாகவும் கூறப்படுகிறது.
பல் சேதம்
கால்சியம் என்பது பல் பற்சிப்பியின் முக்கிய அங்கமாகும். இது பற்களின் மேல் அடுக்கைப் பாதுகாக்கிறது. கால்சியம் போதுமானதாக இல்லாவிட்டால், பற்சிப்பி வலுவிழந்து, பல் சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, பற்கள் விரைவில் உதிர்ந்து விடும் என எச்சரிக்கப்படுகிறது.
பார்கின்சன் நோய்
உடலில் போதுமான கால்சியம் இல்லாவிட்டால் பார்கின்சன் நோய் வரும். கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் பார்கின்சன் நோயை உருவாக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள்.
மூட்டு பிரச்னை
வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் முக்கியமானது. நீண்ட நாட்களாக கால்சியம் சத்து குறைவாக இருந்தால், எலும்பு வலுவிழந்து, மூட்டுவலி போன்ற நோய்கள் வரலாம்.
இதயத் துடிப்பு
இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மின் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கால்சியத்திற்கு உண்டு. கால்சியம் அளவு குறைவாக இருக்கும்போது, இதய தாளத்தில் இடையூறுகள் ஏற்படுகின்றன. இது கார்டியாக் அரித்மியா என்று அழைக்கப்படுகிறது. சீரற்ற இதயத் துடிப்பு, மார்பில் லேசான வலி போன்றவை அறிகுறிகளாகும்.