அதிகரித்த இதயத் துடிப்பின் அறிகுறிகள் என்ன?

By Karthick M
09 Jul 2024, 13:27 IST

உயிருடன் இருக்க இதயம் சரியாக துடிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி இதயத்துடிப்பின் வேகம் மிக வேகமாக இருக்கும். இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கான காரணங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.

திடீரென அதிகரிக்கும் இதயத்துடிப்பு மருத்துவ மொழியில் அரித்மியா என அழைக்கப்படுகிறது. அதிக இதயத் துடிப்பு காரணமாக மாரடைப்பு பிரச்சனை ஏற்படலாம். இதய ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது முக்கியம்.

அதிக வியர்வை

இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கும் போது உங்களுக்கு அதிகமாக வியர்க்க ஆரம்பிக்கும். உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

நெஞ்சு வலி

இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கான முக்கிய அறிகுறி நெஞ்சு வலியாகவும் இருக்கலாம். இதனால் கூட அசௌகரியத்தை உணரலாம்.

பதட்டமான உணர்வு

பதட்டமாக இருப்பது இதய துடிப்பு அதிகரிப்பதற்கான முக்கிய அறிகுறியாகும். பதட்டம் காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

களைப்பான உணர்வு

வேகமாக இதயத் துடிப்பு காரணமாக உடலில் சோர்வு ஏற்படத் தொடங்கும். இதனால் எந்த வேலையும் செய்ய மனமிறக்காது.