உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதால் ஏற்படும் அறிகுறிகள்!

By Karthick M
16 Mar 2024, 18:40 IST

கெட்ட கொலஸ்ட்ரால் அறிகுறிகள்

மோசமான வாழ்க்கை முறையில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது அதிகரிக்கும் போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும் அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் எடை

புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிக காரமான உணவுகளை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உங்கள் எடை வேகமாக அதிகரிக்கிறது. உடல் சோர்வும் ஏற்படும்.

கால்களில் உணர்வின்மை

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பாதங்கள் மரத்துப் போகத் தொடங்கும். உடலில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கால்கள், கைகள் மரத்துப்போகின்றன.

மஞ்சள் நகங்கள்

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் நகம் சிவப்பு நிறத்திற்கு பதிலாக மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.

மாரடைப்பு

கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதேபோல் நெஞ்சுவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.