போதுமான தூக்கம் இல்லையென்றால் வரும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

By Karthick M
29 Mar 2024, 23:37 IST

தூக்கமின்மையால் வரும் பிரச்சனை

விறுவிறுப்பான வாழ்க்கை முறையால் பலரும் போதுமான தூக்கத்தை பெறுவதில்லை. இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சரியாக தூங்கவில்லை என்றால் ஏற்படும் விளைவை பார்க்கலாம்.

போதுமான தூக்கம் அவசியம்

ஆரோக்கியமாக இருக்க நல்ல மற்றும் போதுமான தூக்கத்தை பெறுவது அவசியம். தினசரி ஒருவர் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.

சர்க்கரை நோய் பாதிப்பு

7-8 மணிநேரம் போதுமான தூக்கம் இல்லாததால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.

கார்டிசோல் பிரச்சனை

கார்டிசோல் மன அழுத்த ஹார்மோன். போதுமான தூக்கம் இல்லை என்றால் இந்த ஹார்மோன் அதிகரித்து மன அழுத்தம் ஏற்படும்.

டெஸ்டோஸ்டிரோன் பாதிப்பு

போதுமான தூக்கம் இல்லாததால் உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. இது டெஸ்டோஸ்டிரோனை தடுக்கிறது.

தூக்கமின்மை குறைபாடு

தூக்கமின்மையால் உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், தடிப்புத் தோல் அழற்சி, முடி உதிர்தல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.