நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகள்
பதட்டம் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் பலர் நகம் கடிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இதனால் ஏற்படும் தீமைகளை பலரும் அறிந்திருப்பதில்லை. இதுகுறித்து பார்க்கலாம்.
பாக்டீரியா தொற்று
நகங்களை கடிப்பது மிகவும் கெட்ட பழக்கம். இது பாக்டீரியா தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. நகங்களில் அழுக்கு சேரும். இது அந்த நபரை நோய் வாய்ப்படுத்தும்.
ஈறு பிரச்சனை
நகங்களை மெல்லுவதால் அது வாய்க்குள் சிக்கிக் கொண்டு, ஈறுகளில் இரத்தப்போக்கு அபாயத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த பாக்டீரியா வாய்க்குள் சென்று செரிமான அமைப்பு கோளாறை ஏற்படுத்தும்.
நகம் கடிப்பதை தடுக்க வழிகள்
நகங்களை மெல்லுவது உள்ளே இருக்கும் திசுக்களை சேதப்படுத்தும். இதை தடுக்க நகங்களை வெட்டி சுருக்கமாக வைத்திருங்கள். இது நகம் கடிப்பதை தடுக்க உதவும்.
கைகளை பிசியாக வைத்திருங்கள்
உங்கள் நகங்களை கடிக்க நினைக்கும் போது உங்கள் கைகளை பிசியாக வைத்திருங்கள். ஸ்ட்ரெஸ் பால் போன்ற கேம்களை விஷையாடுங்கள்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
நகங்களை கடிப்பது தீங்கு விளைவிக்கும் விஷயமாகும். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.