மழைக்கால நோய்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

By Ishvarya Gurumurthy G
15 Jun 2024, 08:30 IST

மழைக்காலத்தில் அதிகம் தொல்லை தரும் தொற்றுகள் மற்றும் நோய்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாக காண்போம்.

செரிமானக் குறைபாடு

பருவகால மாற்றத்தின் காரணமாக உடலில் செரிமான குறைபாடு ஏற்படலாம். இதில் உணவு செரிமானத்தில் ஏற்படும் பிரச்னையானது வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

நோயெதிர்ப்புச் சக்தி குறைவு

பொதுவாக, மழைக்காலங்களில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். இது உடல் எளிதில் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சளி, இருமல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

டெங்கு

மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும். அதிக காய்ச்சல், தொண்டை வலி, அதிக வியர்வை, தலைவலி, கண் வலி, குமட்டல், வாந்தி, சோர்வு, சொறி மற்றும் லோபிபி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

மலேரியா

அனோபிலிஸ் கொசு கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது. இந்த கொசுக்களில் உள்ள பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் மனிதர்களை கடிப்பதன் மூலம் பரவுவதால் மலேரியா ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், மலேரியாவால் வயிற்று வலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, மூட்டு வலி, தசைவலி, சுரப்பிகள் வீக்கம், மலத்தில் இரத்தம், குமட்டல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

குளிர் காய்ச்சல்

அதிக ஈரப்பதம், வெப்பநிலை மாற்றங்கள போன்றவை காய்ச்சல் பரவ ஏற்ற சூழ்நிலைகளாகும். காய்ச்சல், சளி, இருமல், மூக்கு ஒழுகுதல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல், சோர்வு, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் போன்றவை வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

சிக்கன்குனியா

தேங்கி நிற்கும் நீரில் பெருகும் ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுவால் சிக்குன்குனியா பரவுகிறது. பாதிக்கப்பட்ட கொசு கடித்த 3-7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும். இதனால் காய்ச்சல், மலத்தில் வலி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.

டைபாய்டு

குடிசைப்பகுதிகள் மற்றும் குப்பைகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளில் டைபாய்டு காய்ச்சல் அதிகம் காணப்படுகிறது. சால்மோனெல்லா என்டெரிகா செரோவர் டைஃபி (எஸ். டைஃபி) என்ற பாக்டீரியாவால் டைபாய்டு ஏற்படுகிறது.