குதிங்கால் வலிக்கான காரணங்கள் என்ன?

By Karthick M
11 Apr 2024, 23:03 IST

குதிங்கால் வலிக்கான காரணங்கள்

பெரும்பாலானோர் குதிங்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல் பலரும் தவிக்கிறார்கள். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக உடல் எடை

அதிக உடல் எடை மற்றும் தவறான செருப்புகளை அணிவதால் குதிங்கால் வலி ஏற்படலாம். குறிப்பாக உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்காவிட்டாலும் இந்த பிரச்சனை நேரும்.

உடற்பயிற்சி அவசியம்

உடல் எடை அதிகரிப்பதால் எலும்புகளின் வலிமை குறையத் தொடங்குகிறது. இது குதிங்கால் வலியை ஏற்படுத்தும்.

தவறான காலணிகளை அணிவது

தவறான அளவிலான செருப்புகளை அணிவதால் உங்களுக்கு குதிங்கால் வலி ஏற்படும். எனவே குதிங்கால் வலியை குணப்படுத்த உடனடியாக காலணியை மாற்றவும்.

எலும்பு நோயின் அறிகுறிகள்

எலும்புகள் தொடர்பான நோய் ஏற்பட்டாலும் குதிங்கால் வலி ஏற்படத் தொடங்குகிறது. இதை சரிசெய்ய மருத்துவ உதவியை நாடுவது மிக அவசியம். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.