கண்கள் துடிப்பது மயோக்கிமியா என அழைக்கப்படுகிறது. இதில் கண் துடிப்புக்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்
ஊட்டச்சத்து குறைபாடு
உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பின், அவை கண்களில் உள்ள தசைகளைத் துடிக்க வைக்கிறது. குறிப்பாக, மெக்னீசியம் குறைபாடுகள் கண் துடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது
ஒவ்வாமை ஏற்படுவது
கண்களில் ஒவ்வாமை ஏற்படும் போது ஹிஸ்டமைன்களை வெளியேற்றுகிறது. இது கண் இழுப்பை உண்டாக்குகிறது
கண் வறட்சி
அதிக நேரம் கணினி, மொபைல் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு கண்கள் விரைவாக வறட்சியடைந்து விடும். இதன் காரணமாக கண் துடிப்பு ஏற்படலாம்
புகைபிடித்தல், மது அருந்துதல்
ஆல்கஹால் அருந்துதல், புகையிலை பயன்படுத்துதல் போன்றவற்றால் கண் இழுப்பு ஏற்படலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது
மருந்துகள்
சில மருந்துகள், குறிப்பாக மனநோய், கால்-கை வலிப்பு அல்லது ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளாக கண் இழுப்பு ஏற்படலாம்
போதிய தூக்கமின்மை
தூக்கமின்மை அல்லது சோர்வு போன்றவை கண் இழுப்பிற்கு வழிவகுக்கிறது