பல நேரங்களில் மக்களுக்கு பசி எடுப்பதே இல்லை. இது பல தீவிர காரணங்களின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மைக்கான காரணங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.
இரும்புச்சத்து குறைபாடு
உடலில் இரும்புச்சத்து மற்றும் இரத்தம் இல்லாததால் பசியின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.
மன அழுத்தம் பிரச்சனை
பரபரப்பான வாழ்க்கை முறையால் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதன் காரணமாகவும் பசியின்மை ஏற்படலாம்.
கல்லீரல் தொற்று
கல்லீரல் தொற்று பிரச்சனை உள்ளவர்களுக்கும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு பசியின்மை ஏற்படும்.
ஹெபடைடிஸ் காரணங்கள்
மக்கள் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் போது கல்லீரல் வீக்கம் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
சிறுநீரகம், ஹைப்போ தைராய்டிசம், செரிமான பிரச்சனை
சிறுநீரகம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பசி ஏற்படாது. அதேபோல் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் பசி எடுக்காது.