கட்டிப்பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!

By Ishvarya Gurumurthy G
13 Feb 2024, 23:16 IST

கட்டிப்பிடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றால்? ஆம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது குறித்து இங்கே காண்போம்.

கவலை நீங்கும்

ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது அவர்களை கட்டியணைத்தால் மட்டும் போதும். மன கவலையில் இருந்து எளிதில் வெளிவருவார்கள்.

இதயத்திற்கு நல்லது

கட்டிப்பிடிப்பதால் இதயத்திற்கு நல்ல கதகதப்பு கிடைக்கும். இந்த உணர்வு உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பயம் நீங்கும்

உங்கள் துணையுடன் ஏதேனும் தயக்கம் அல்லது பயம் இருந்தால், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொள்ளவும்.

இரத்த அழுத்தம் குறையும்

நீங்கள் கட்டிப்பித்துக்கொள்ளும் போது உங்கள் இரத்தக்கொதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

மகிழ்ச்சியான மனநிலை

நீங்கள் கட்டிப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். இதற்கு காரணம் செரோடோனின் அளவு அதிகரிப்பது தான்.