உடலில் இரத்த அளவு குறையும் போது இந்த அறிகுறிகள் தோன்றும்.!

By Ishvarya Gurumurthy G
28 Dec 2023, 15:05 IST

உங்கள் உடலில் இரத்த குறைவு ஏற்படும்போது எந்தமாதிரியான அறிகுறிகள் தோன்றும் தெரியுமா? இதன் அறிகுறிகள் குறித்து இங்கே காண்போம்.

நகத்தின் தோல்கள் உரியும்

உங்கள் கை கால் நகங்களின் மேல் தோல் உரிகிறது என்றால், உடலில் இரத்தம் குறைந்து வருகிறது என்று அர்த்தம்.

தோல் சிவத்தல்

உடலில் இரத்தம் இல்லாததால், தோலில் சிவப்பு சொறி தோன்றத் தொடங்குகிறது. இவை அடிக்கடி அரிப்பு ஏற்படுத்தினாலும் சில சமயங்களில் வலி பிரச்சனையும் இருக்கலாம்.

பலவீனம்

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், இரத்த சிவப்பணுக்கள் பாதிக்கப்படும். இதனால் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டும். இதன் காரணமாக, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள்

இரத்தம் இல்லாததால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்த காரணத்திற்காக உங்கள் கைகள் மற்றும் கால்கள் அடிக்கடி குளிர்ச்சியாக இருக்கும்.

பலவீனமான நகங்கள்

இரத்தம் இல்லாததால், உங்கள் நகங்கள் பலவீனமடையத் தொடங்கும். இதன் காரணமாக, அவை விரைவாக உடையத் தொடங்குகின்றன.

வெளிறிய தோல்

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், உங்கள் தோல் மஞ்சள் நிறமாக மாறும். தவிர, கண்களின் வெள்ளைப் பகுதியும் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது.