காலம் காலமாக ஆண்கள் பெண்கள் என அனைவரும் கூறும் கருத்துக்களில் ஒன்று ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வு ஏற்படும் என்பது. இதனாலேயே, ஹெல்மெட் அணியாமல் பைகுகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இந்த கருத்து உண்மையா? உண்மையில் ஹெல்மெட் அணிந்தால் முடி உதிருமா என இங்கே பார்க்கலாம்.
ஹெல்மெட் போட்டா முடி கொட்டுமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி உதிரும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. முடி உதிர்வுக்கும் ஹெல்மெட் அணிவதற்கும் எந்த நேரடி சம்மந்தமும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
முடி உதிர காரணம்?
ஹெல்மெட்-யை மிகவும் இறுக்கமாக அணிவதாலும், ஹெல்மெட்-யை சரியாக சுத்தம் செய்யாததால் மட்டுமே உங்கள் தலைமுடி பாதிப்படைவதற்கு அதிக பாதிப்பு உண்டு.
முடி உதிர்வை தடுக்க
முடி உதிர்வை தடுக்க இறுக்கமாக ஹெல்மெட் அணிவதை தடுக்கவும். ஹெல்மெட் அணிவதற்கு முன் இறுக்கமாக பாண்ட் அணிவதை தவிர்க்கவும். அதற்கு பதில், ஹெல்மெட் அணிவதற்கு முன் தலையில் காட்டன் துணிகளை அணியவும்.
சரியான பராமரிப்பு
ஹெல்மெட்டை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்யவும். குறிப்பாக ஹெல்மெட்யை காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்கவும்.
அதீத வியர்வை
உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால், ஒருநாள் விட்டு ஒருநாள் ஹேர் வாஷ் செய்யவும். ஹேர் வாஷ் செய்த பின் முடி ஈரமாக இருக்கும் பொது ஹெல்மெட் அணியாதீர்கள் அதனால், தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
காற்றோட்டமான ஹெல்மெட்
இப்போதெல்லாம் சந்தைகளில் வெண்டிலேட்டர் ஹெல்மெட் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்தும் போது முடிகளுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கும்.
ஹெல்மெட் பயன்கள்
ஹெல்மெட்யை சரியாக பயன்படுத்துவதால், உங்கள் தலைமுடி சூரிய கதிர்கள், வெப்பம் மற்றும் மாசில் இருந்து பாதுகாக்கப்படும். எனவே, ஹெல்மெட் அணிவது உயிருக்கு மட்டும் அல்ல தலை முடிக்கும் பாதுகாப்பானது.