வீக்கம் குறைய சாப்பிட வேண்டிய காய்கறிகள்

By Gowthami Subramani
22 Apr 2024, 09:04 IST

நோய்க்கிருமிகள், சேதமடைந்த செல்கள், எரிச்சலூட்டும் பொருள்கள் போன்றவை தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களுக்கு உடலின் இயற்கையான எதிர்வினையாகும். இதில் வீக்கத்தைக் குறைக்க உதவும் பொதுவான காய்கறிகளைக் காணலாம்

கீரை

ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைப்பதுடன் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது

ப்ரோக்கோலி

இது ஒரு ஆரோக்கியமான க்ரூசிபெரஸ் காய்கறி ஆகும். இதில் சல்போராபேன் உள்ளது. இதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. காய்கறியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

காலே

இதன் உயர்தரமான ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் கே, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

குடை மிளகாய்

இது வைட்டமின் சி நிறைந்த காய்கறியாகும். இவற்றை உணவில் சேர்ப்பது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது

பூண்டு

பூண்டில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

பீட்ரூட்

இது மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

வெங்காயம்

இதில் குர்செடின் என்ற சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது

முட்டைக்கோஸ்

இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது