கை, கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப இது ஹை கொலஸ்ட்ரால் தான்

By Gowthami Subramani
19 Apr 2024, 17:56 IST

அதிக கொழுப்பு என்பது பொதுவான உடல்நல பிரச்சனையாகும். இதனால், இரவில் கால்கள் மற்றும் பாதங்களில் சில அசாதாரண அறிகுறிகள் தோன்றலாம்

குளிர்கால்கள்

தொடர்ந்து பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பது இரவு நேரத்தில் கொலஸ்ட்ரால் அடைப்புகளால் இரத்த ஓட்டம் தடைபடலாம்

அமைதியற்ற கால்கள் நோய்க்குறி

இரவில் கால்களில் ஏதாவது வலி ஏற்படுவது கொலஸ்ட்ரால் பிரச்சனையாக இருக்கக் கூடும். இது இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு செயல்பாட்டை பாதிக்கலாம்

கால் பிடிப்புகள்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பால், இரவில் அடிக்கடி கால் பிடிப்புகள் ஏற்படலாம். இது மோசமான சுழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்

உணர்வின்மை

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, நரம்பு சேதம் உண்டாகலாம். இதன் விளைவாக கால்கள், பாதங்களில் உணர்வின்மை ஏற்படும்

வீக்கம்

இரவில் கணுக்கால் அல்லது பாதங்கள் வீங்குவது, இரத்த நாளங்களை பாதிக்கலம். இதுவும் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறியாகும்

கொலஸ்ட்ரால் குறித்த இந்த கருத்துகள் பொதுவான தகவல்களை மட்டுமே தருவதாகும். இதன் தகுதியான மருத்துவக் கருத்துக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது