சர்க்கரை நோயில் எத்தனை வகை இருக்கு தெரியுமா?

By Devaki Jeganathan
02 Jun 2025, 05:15 IST

நீரிழிவு நோய் என்பது உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி இல்லாமல் அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாதது ஆகும். ஆற்றல் இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவையும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற, இன்சுலின் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்சுலின் ஏற்றத்-தாழ்வுகளால் ஏற்படும் சர்க்கரை நோய் வகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

நீரிழிவு வகைகள்

நீரிழிவு நோயானது ‘டைப் - 1 நீரிழிவு (Type 1), டைப் - 2 நீரிழிவு (Type 2) மற்றும் கர்பக்கால நீரிழிவு (Gestational)’ என மூன்று பொதுவாக வகை உள்ளது.

டைப் - 1 நீரிழிவு

டைப் - 1 நீரிழவு என்பது தன்னுடல் தாக்கு நோய் என அழைக்கப்படுகிறது. உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரப்பு இல்லாத நிலை அல்லது இன்சுலின் சுரப்பே இல்லாத நிலையை தான் நாம் “டைப் - 1 நீரிழிவு” என அழைக்கிறோம்.

யார் பாதிக்கப்படுவார்கள்?

தற்போது டைப் - 1 நீரிழிவு ஆனது பெரும்பாலும் குழந்தைகளை தாக்குகிறது. அதேநேரம் 30 வயதுக்கு குறைவாக நபர்களும் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

டைப் - 2 நீரிழிவு

உடலில் உற்பத்தியாகும் இன்சுலினை சரியாக பயன்படுத்திக்கொள்ள இயலாத நிலையை தான் டைப் - 2 நீரிழிவு என அழைக்கிறோம். அதாவது, உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்தாமல், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையலை டைப் - 2 நீரிழிவு என்கிறோம்.

யாரை தாக்கும்?

டைப் - 2 நீரிழிவானது பெரும்பாலும் மரபியல் காரணங்களால் ஏற்படலாம். அதே போல, உடல் செயல்பாடு குறைவாகவும், உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களையும் பெரிதும் தாக்கும்.

கர்ப்பக்கால நீரிழிவு

இது பெண்களின் கர்ப்பக் காலத்தில் மட்டும் ஏற்படும் நீரிழிவு நோயாகும். இது, பெண்களின் கர்ப்பக் காலத்தில் 20-வது வாரத்திற்கு பின் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றனர்.

பாதிப்பு உண்டா?

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயானது, பிரசவத்திற்கு பின் தானாகவே மறைந்துவிடும். இந்த பிரச்சனையை அலட்சியமாக விட்டால், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.