குழந்தைகளை மழைக்காலத் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?

By Gowthami Subramani
14 Jun 2024, 19:01 IST

பொதுவாக குழந்தைகளுக்கு குறைந்த அளவிலான் நோயெதிர்ப்பு சக்தியே இருக்கும். இதனால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர். இதில் மழைக்காலத் தொற்றுக்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சில குறிப்புகளைக் காண்போம்

ஆடை தேர்ந்தெடுப்பது

பருவமழை காலத்தில் குளிரைத் தாங்கவும், நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடவும் முழு கைகளுடன் கூடிய கூடுதல் அடுக்கு ஆடைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்

சூடாகவும், உலரவும் வைப்பது

அதிக ஈரப்பதம் நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே குழந்தைகள் மழையில் நனைந்தால், அவர்கள் சுத்தமான மற்றும் உலர்ந்த ஆடைகளை மாற்ற வலியுறுத்த வேண்டும்

கொசுக்களிலிருந்து பாதுகாப்பு

மழைக்காலத்தில் பரவும் டெங்கு, மலேரியா போன்றவை கொசுக்களால் ஏற்படுவதாகும். எனவே குழந்தைகளைக் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க கொசு வலைகள், கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்

கை கழுவுதல்

குழந்தைகள் வெளியே சென்று வீடு திரும்பும் போது, கை, கால்கள் கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகளை பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கலாம்

தூய்மையாக இருப்பது

மழைக்காலத்தில் வீடுகளைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும். அதே போல, குழந்தைகளுக்கு சுத்தமான உடைகள், காலுறைகள் மற்றும் காலணிகளை அணிவதை உறுதி செய்ய வேண்டும்

ஆரோக்கியமான உணவு

பருவகாலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும். அதன் படி, ஏராளமான கீரைகள், பப்பாளி, மாதுளை, வாழைப்பழம், பீட்ரூட் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது