வேலை இடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க பல வழிகளை முயற்சித்து தோல்வியா.? இந்த டிப்ஸ் ஃபாளோ பண்ணுங்க.. நல்ல பலன் கிடைக்கும்.
அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு இடங்களில் மன அழுத்தம், பதட்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதில் பணியிடம் மட்டும் விதிவிலக்கா என்ன? போதிய உடல் செயல்பாடு இல்லாமை நீண்ட கால மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதில் பணியிட மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காணலாம்.
தேநீர் இடைவேளை
இன்று பலரும் மன அழுத்தம் இருக்கும் போது டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வர். ஏனெனில், இந்த மன அழுத்த காலங்களில் டீ அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்வது மன அழுத்தத்தை நீக்குவதுடன், மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே பணி நேரங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளை எடுத்து தேநீரில் கவனம் செலுத்தலாம்.
அறிவிப்பைத் துண்டிப்பது
நாம் இன்று செல்போன் இல்லாத நபர்களையே பார்க்க முடிவதில்லை. ஆனால், அடிக்கடி மொபைல் போன்களைப் பயன்படுத்துவது கண் ஆரோக்கியம் போன்ற உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. இந்நிலையில் மொபைல் போன்களில் அடிக்கடி வெளிவரும் அறிவிப்புகளின் நிலையான ஒலியை தவிர்க்கவும்.
எல்லைகளை அமைப்பது
விடுமுறை நாட்களில் அலுவலகப் பணியின் போது அல்லது வேறு சில செயலின் போது, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே எல்லைகளை நிறுவ வேண்டும். தெளிவான எல்லைகளை நிறுவுவதன் மூலம், தனிப்பட்ட இடத்தில் வேலை தொடர்பான மன அழுத்தத்தை ஊடுருவாமல் தடுக்கலாம்.
சிறிய வெற்றிகளை அனுபவிப்பது
இன்று பலரும் செய்யக்கூடிய வேலைக்கு ஏற்ற மதிப்பு, பாராட்டு போன்றவற்றைப் பெறுவதில்லை. இதன் காரணமாகவும் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே அவ்வப்போது இலக்கை அடைந்ததற்காக, சிறிய வெற்றிகளை அனுபவிக்கலாம்.
இல்லை என்ற சக்தியைத் தழுவுவது
ஒவ்வொரு பணிக்கும் ஆம் என்று கூறுவதற்கு நாம் கடினமாக உணர்கிறோம். குறிப்பாக, நமக்கு பதட்டம், பயம் அல்லது நம்பிக்கையற்றதாக உணர வைக்கிறது. இந்நிலையில் தேவைப்படும் போது இல்லை என்று சொல்லும் கலையை கற்றுக் கொள்வதும் மிக முக்கிய திறமையாகும்.