உங்க எலும்பு வலுவாக இருக்க இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
25 May 2024, 09:00 IST

எலும்பு ஆரோக்கியமாக இருக்க அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். இதில் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் குறிப்புகள் சிலவற்றைக் காணலாம்

எலும்பு வலுவாக

ஓடுதல், நடைபயிற்சி மற்றும் எடை தூக்குதல் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எலும்பு அடர்த்தியை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது

ஆரோக்கியமான எடை பராமரிப்பு

குறைவான எடை அல்லது அதிக எடையுடன் இருப்பது எலும்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, எலும்பு வலிமையை ஆதரிக்க, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்

கால்சியம் நிறைந்த உணவுகள்

எலும்பு வலிமைக்கு பால் பொருட்கள், இலை கீரைகள், பாதாம் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்

வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள்

உடல் கால்சியத்தை திறம்பட உறிஞ்சுவதற்கு, வைட்டமின் டி அவசியமாகும். அதன் படி, சூரிய ஒளியில் நிற்பது மற்றும் மீன், முட்டை, பால் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்

மது, புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்

அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம். எனவே எலும்பு வலிமைக்கு இந்த பழக்கங்களைத் தவிர்ப்பதும், கட்டுப்படுத்துவதும் அவசியமாகும்

புரத உணவு

எலும்பு ஆரோக்கியத்திற்கு புரதம் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் புரத சத்துக்கள் எலும்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது. எனவே புரத உணவுகளான பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஒல்லியான இறைச்சிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

தவிர்க்க வேண்டியவை

எலும்பு வலிமைக்கு காஃபின் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், இவை கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கலாம். இது காலப்போக்கில் எலும்பு இழப்புக்கு வழிவகுக்கலாம்