உங்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழி தேடுகிறீர்களா.? இதற்காக சில வழிகளை பின்பற்றினாலே போதும்.. அவை என்னவென்று இங்கே காண்போம்.
தியானம்
நினைவாற்றல் மேம்பாடு மற்றும் புத்திக் கூர்மைக்கு தியானம் எளிய மற்றும் சிறந்த வழியாகும். இது உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் தினந்தோறும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், நினைவாற்றலை மேம்படுத்துகிறது. தியானம் செய்வது மூளையைத் தளர்த்தி நினைவாற்றலைக் கூர்மையாக்குகிறது.
போதுமான உறக்கம்
குறைவான தூக்கம் மன அழுத்தத்தை உண்டாக்குவதுடன், நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது. மேலும், இது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே நினைவாற்றல் மேம்பாடு மற்றும் மூளைத் திறன் அதிகரிக்க, நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
மீன் எண்ணெய்
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், இதில் DHA நிறைந்துள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் தருகிறது.
உடல் எடை இழப்பு
அதிக உடல் எடையைக் கொண்டிருக்கும் போது, நோய்களின் ஆபத்தை அதிகரிக்கலாம். உடல் பருமன் காரணமாக, நோயெதிர்ப்புச் சக்தி குறைகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கலாம். உடல் பருமன் காரணமாக அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
சர்க்கரை உட்கொள்ளல் குறைப்பது
நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில், அதிக சர்க்கரை உணவுகள் நீரிழிவு, இதய நோய், மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், இது அதிகம் உட்கொள்வதால் நினைவாற்றலை பலவீனப்படுத்தி, மூளையையும் மங்கச் செய்யும்.
நினைவாற்றல் மேம்பாட்டிற்கு இந்த முறைகளைக் கையாளலாம். எனினும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே இந்த முறைகளைக் பின்பற்ற வேண்டும்.