முடி வெட்ட சலூன் போகும் போது கவனிக்க வேண்டிய விஷயம்!

By Karthick M
09 May 2025, 19:00 IST

முடி திருத்த கடை வளர்ச்சி அடைந்திருந்தாலும் சில குறிப்பிட்ட விஷயங்களில் நாமும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பலருக்கும் ஒரே கத்திரிக்கோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கத்திரிக்கோல் ஒருவருக்கு வெட்டப்பட்ட உடன் முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்யவும்.

ஷேவிங் செய்ய பயன்படுத்தப்படும் பிளேடு ஒவ்வொரு முறையும் மாற்றப்படுகிறதா என்பதை கட்டாயம் உறுதி செய்வது அவசியம்.

ஷேவிங் பின் அனைவருக்கும் துண்டு வைத்து துடைக்கப்படும், அப்படி பயன்படுத்தினால் தேமல் வரும். எனவே கையோடு ஒரு துண்டு வைத்திருப்பது நல்லது.

முடி திருத்தம் செய்த உடன் பெரும்பாலான கடைகளில் ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஹீட்டர் அதிக நேரம் பயன்படுத்தும் பட்சத்தில் முடி கொட்ட அதிக வாய்ப்புள்ளது.