மழைக்காலத்தில் டெங்கு கொசுக்களின் தொல்லை அதிகரிக்கும். இதனால், பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள். டெங்கு பாதிப்பால், பிளேட்லெட்டுகள் திடீரென குறையும். ஒரே இரவில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சில இலைகள் பற்றி பார்க்கலாம்.
கொய்யா இலை
கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இதை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேப்ப இலை
நோய்த்தொற்றுகளை நீக்குவதில் வேப்ப இலைகள் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனைப் பயன்படுத்துவதால் டெங்கு பாதிப்புகள் குறைவதுடன், ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
நிலவேம்பு இலை
நிலவேம்பு இலைகளின் சாறு பல பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் இலைகளில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வர உதவுகிறது.
எப்படி உட்கொள்ள வேண்டும்?
நிலவேம்பு இலையைக் கஷாயம் செய்து குடிக்கலாம். இதன் இலைகள் மற்ற வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
அரச இலை
அரச இலைகளை கஷாயம் செய்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம். இது உடலில் பிளேட்லெட்டுகளை வேகமாக அதிகரிப்பதுடன் காய்ச்சலையும் குறைக்கிறது. இதன் இலைகள் டெங்குவுக்கு சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது.
பிரியாணி இலை
மசாலாப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலைகள் உணவின் சுவையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆனால், இது டெங்கு சிகிச்சையிலும் உதவியாக இருக்கும்.
பிரியாணி இலையை எப்படி சாப்பிடுவது?
பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், இரத்த தட்டுக்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். டெங்கு சிகிச்சையில் இது பயனுள்ளதாக இருக்கும்.