உஷார்! வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இது தான்

By Gowthami Subramani
29 Jun 2024, 09:00 IST

வைட்டமின் பி12

மனித உடல் வைட்டமின் பி 12 ஐ உற்பத்தி செய்யாது. எனவே இதை உணவின் மூலமாகவே பெற முடியும். அதன் படி, ரொட்டி, தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் பி12 உள்ளது. எனினும் உடலில் பி12 போதுமான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை என்பதற்கு சில அறிகுறிகள் தென்படும்

வெளிறிய தோல்

வைட்டமின் பி12 குறைபாட்டால் தோல் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கலாம். இது மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளைக் குறிக்கிறது. மேலும் உடல் போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யாதபோது, வைட்டமின் பி12 குறைபாட்டைக் குறிக்கிறது

கை கால்களில் நடுக்கம்

புற நரம்புகளுடன் இணைக்கப்பட்டு கைகள் மற்றும் கால்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நரம்புகள் சேதமடைந்தால் கூச்ச உணர்வுகளை ஏற்படுத்தும். இது உடலில் பி12 குறைபாட்டைக் குறிக்கிறது

வாய் வலி

வைட்டமின் பி12 குறைபாடு வாய்வழி சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதன் படி, வாயில் மோசமான சுவை, வீக்கம், நாக்கு சிவத்தல் மற்றும் வாயில் எரியும் உணர்வு போன்றவற்றைத் தரும்

நடப்பதில் சிக்கல்

புற நரம்பு சேதத்தால் நடப்பதில் சிக்கல் உண்டாகலாம். இது கால்களில் உணர்வின்மையை ஏற்படுத்தி, ஆதரவின்றி நடப்பதற்கு சவாலானதாக இருக்கும். மேலும் இது தசை பலவீனம் மற்றும் குறைந்த அனிச்சைக்கு வழிவகுக்கிறது

எடை இழப்பு

வைட்டமின் பி12 குறைபாடானது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால், குமட்டல் மற்றும் பசியின்மை ஏற்படலாம். இதன் விளைவாக உடல் எடை குறையும்

குமட்டல்

வைட்டமின் B12 இன் குறைபாடு செரிமான மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாமல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோய் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்

சோர்வு

குறைந்த வைட்டமின் பி12 ஆனது மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவை ஏற்படுத்துகிறது. இது உடல் சோர்வுக்கு வழிவகுக்கலாம்

வேகமான இதயத் துடிப்பு

வைட்டமின் பி12 குறைபாட்டால் வேகமான இதயத் துடிப்பு ஏற்படுகிறது. இது இதயத்தை வேகமாக துடிக்கச் செய்து, உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இது குறைந்த ஆக்ஸிஜன் சுழற்சிக்கு வழிவகுக்கிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்