தமிழகத்திலும் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்! இதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பது எப்படி?

By Gowthami Subramani
14 May 2024, 09:00 IST

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது கியூலக்ஸ் வகை கொசுக்களால் பரவுவதாகும். இது பறவைகளிடமிருந்து கொசுக்களும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதனுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை

நோய் அறிகுறிகள்

இதன் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை ஏற்படுகிறது. சிலருக்குக் கடுமையான அறிகுறிகளாக அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா போன்றவை ஏற்படலாம். மேலும் உணர்வின்மை, வலிப்பு, மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.

மூளைக்காய்ச்சல்

வெஸ்ட் நைல் வைரஸ் நோயின் அறிகுறிகள் இருப்பின், குறிப்பாக மூளை காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

பரிசோதனைகள்

வெஸ்ட் நைல் வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கு எலைசா (Elisa) மற்றும் ஆர்டி பிசிஆர் (RTPCR) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது

தற்காப்பு முறை 1

இந்த காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்

தற்காப்பு முறை 2

வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து இந்த வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்

இது போன்ற தடுப்பு முறைகளைக் கையாண்டு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றின் அபாயத்தைத் தவிர்க்கலாம். இந்த அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது