கடுமையான வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க எளிய வழிகள்!

By Karthick M
08 Apr 2025, 20:46 IST

புற ஊதா கதிர்வீச்சினால் கண்ணின் கார்னியா, லென்ஸ் சேதமடையலாம். இது ஃபோட்டோகெராடிடிஸ், கண்புரை, மாகுலர் சிதைவு, கண் புற்றுநோய் போன்ற நிலைக்கு வழிவகுக்கும்.

நேரடி சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடும் போது 99-100% UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்கும் சன்கிளாஸ்களை அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

சூரிய ஒளி கண்களை அடைவதைத் தடுக்கும் பரந்த விளிம்பு கொண்ட தொப்பியை அணிவது நல்லது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரியனின் உச்சக்கட்ட நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். தேவைக்கு சென்றால் உரிய பாதுகாப்பு முக்கியம்.

கண் சொட்டுகள் பல்வேறு கண் நிலைமைகளுக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால் அவற்றை எச்சரிக்கையுடன் மற்றும் மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்துவது முக்கியம்.

தீவிரமான. தொடர்ச்சியான கண் பிரச்சனைகளுக்கு கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தும் முன்பு கண் பராமரிப்பு நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்.