வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலங்களில் கண் சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இதனை தடுக்க எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வறட்சி அடைய விடக்கூடாது
கண்களை எப்போதும் வறட்சி அடைய விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது முகத்தை குளிர்ந்து நீரால் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கண்களையாவது நீரால் கழுவ வேண்டும்.
சன்கிளாஸ்கள்
சன்கிளாஸ்கள் அழகுக்காக மட்டும் அல்ல. உங்கள் கண்பார்வையை மேம்படுத்தவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பாதிப்பு, மாசு உள்ளிட்டவைகளில் இருந்து உங்கள் கண்களை இது பாதுகாக்க உதவுகிறது.
உறக்கம் மிக அவசியம்
இரவு தூங்குவதற்கு முன் செல்போன், லேப்டாப் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அடுத்தநாள் காலை எழும் போது இது உங்கள் கண்களை வறட்சி அடைய வைக்கும். நிம்மதியாக உறங்குவது கண்களுக்கு மிக முக்கியம்.
ஆரஞ்ச் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
ஒருநாளைக்கு ஒரு ஆரஞ்ச் என்பது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
நட்ஸ்
நட்ஸ் சாப்பிடுவது உடலின் வலு அதிகரிப்பதோடு இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் ஈ கண் பார்வைக்கு கூடுதல் சக்தியை வழங்குகிறது. இதில் அதிக அளவு புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.