பெரும்பாலும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் என அழைக்கப்படுகிறது. இது உடலில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஆனால், இந்த வைட்டமின்டி குறைபாட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் எழலாம்
எடை அதிகரிப்பு
உடலில் வைட்டமின் டி இல்லாதது, உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். குறைந்த அளவிலான வைட்டமின் டி சத்துக்கள் கொழுப்பை எரிக்கும் திறனில் தலையிட்டு எடை அதிகரிப்பதற்கும் காரணமாகலாம்
அடிக்கடி தொற்று
அடிக்கடி சளி பிடிப்பதும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும். ஏனெனில் வைட்டமின் டி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது
தசை பலவீனம்
தசை செயல்பாட்டிற்கு போதிய வைட்டமின் டி சத்துக்கள் அவசியமாகும். இதன் குறைபாட்டால் தசை பலவீனம் அல்லது பிடிப்பு ஏற்படலாம்
எலும்புகளில் வலி
வைட்டமின் டி குறைபாட்டால், கீழ் முதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வ்லை ஏற்படலாம். இவை கால்சியம் உறிஞ்சுதலுக்கு இன்றியமையாததாக அமைகிறது. குறைந்த அளவு வைட்டமின் டி சத்துக்களால், எலும்புகள் மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறலாம்
சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை
வைட்டமின் டி குறைபாடு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு குறைவதில் பங்களிக்கிறது. மேலும் இவை சிறுநீரம், கல்லீரல் உறுப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்தலாம்
மனநிலைக் கோளாறு
வைட்டமின் டி குறைபாட்டால் திடீர் மனநிலை சரிவு ஏற்படலாம். ஏனெனில் குறைந்த வைட்டமின் டி அளவுகள் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகளுடன் தொடர்புடையதாகும்
சோர்வு
சோர்வாகவும், மந்தமாகவும் இருப்பதற்கு தூக்கமின்மை மட்டும் காரணமாக இருக்காது. இது வைட்டமின் டி குறைபாட்டினாலும் ஏற்படும். இவை உடலின் ஆற்றலைக் குறைத்து தினசரி செயல்பாடுகளை செய்ய கடினமாக்கலாம்