உடல் செயல்பாடுகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவைப்படுகின்றன. அதன் படி, உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் சத்துக்கள் இன்றியமையாததாகும்
புரோட்டீன் குறைபாடு
தசை மற்ரும் எலும்பு வளர்ச்சி வரை புரதம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், உடல் போதுமான புரதத்தைப் பெறவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் சில பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்
தசையிழப்பு
போதுமான புரதம் இல்லாமையால் உடல் ஆற்றலுக்கான தசை திசுக்களை உடைக்கத் தொடங்கலாம். இது காலப்போக்கில் தசையிழப்பு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு நாளும் புரதத்தை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
சோர்வு
உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க புரதம் அவசியமான ஒன்றாகும். இதில் ஒருவர் அடிக்கடி சோர்வு அல்லது மந்தமாக உணர்ந்தால், உடலுக்கு அதன் ஆற்றல் தேவைகளைத் தக்க வைத்துக் கொள்ள போதுமான புரதம் கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது
மனநல மாற்றம்
மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் நரம்பியக்கடத்திகளின் உற்பத்திக்கு புரதம் அவசியமாகும். மோசமான மனநிலையுடன் காணப்படுபவர்கள், போதுமான புரதத்தை உட்கொள்ளாமல் இருப்பது காரணமாகிறது
வளர்ச்சிதை மாற்ற பாதிப்பு
உடலில் புரதம் இல்லாத போது தசை வெகுஜன இழப்பு நேரிடலாம். இது உடலில் ஒட்டுமொத்த வலிமையைக் குறைப்பதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கலாம்
முடி உதிர்வு
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. எனினும் புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொள்ளாத போது முடி உதிர்தல் ஏற்படலாம்